உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரக்கன்றுகள் நட்டு மாணவர்கள் பராமரிப்பு

மரக்கன்றுகள் நட்டு மாணவர்கள் பராமரிப்பு

கோவில்பாளையம்; ஆடுகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அக்ரஹார சாம குளத்தில் மரக்கன்றுகளை சுற்றி மாணவர்கள் சேலை கட்டினர். கோவில்பாளையம் அருகே 160 ஏக்கர் பரப்பளவு உள்ள அக்ரஹார சாம குளத்தில், ஏரி பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் கவுசிகா நீர் கரங்கள் சார்பில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. 241வது வாரமாக நேற்று முன்தினம் நடந்த சீரமைப்பு பணியில் கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, பயோ டெக்னாலஜி துறை மாணவர்கள் 50 பேர் பங்கேற்றனர். ஆறடி உயரம் வளர்ந்த பல்வேறு வகை மரக்கன்றுகளை குளத்தை ஒட்டியும் குளக்கரையிலும் நட்டனர். இப்பகுதியில் ஆடுகள் அதிகமாக உள்ளதால் மரக்கன்றுகளை சேதப்படுத்தாமல் இருக்க மரக்கன்றுகளை சுற்றி சிறு கம்புகளை நட்டு அவற்றில் பழைய சேலைகளை கட்டினர். அந்த சேலைகள் மீது சாணத்தை தெளித்தனர்.இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் 2000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். எனினும் சில இடங்களில் ஆடுகள் செடி மற்றும் மரக்கன்றுகளை சேதப்படுத்தாமல் இருக்க மரக்கன்றுகளை சுற்றி சேலை கட்டி வருகிறோம். நான்கு நாட்களுக்கு ஒரு முறை அந்த சேலையில் சாணத்தை தெளிக்கிறோம். இதனால் இந்த மரக்கன்றுகளை ஆடுகள் தீண்டுவதில்லை. களப்பணியில் ஈடுபட விரும்புவோர் 93632 26237 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை