மாநில போட்டிக்கு மாணவியர் தகுதி
பொள்ளாச்சி: பள்ளிகல்வித்துறை சார்பில், கோவை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டி, கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. அதில், ஆனைமலை அடுத்த காளியாபுரம் பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி ரமிதா, 3,000 மீ., ஓட்டம், 1,500 மீ., ஓட்டத்தில் முதலிடமும், 800 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம் பிடித்ததுடன், தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இதேபோல, 7ம் வகுப்பு மாணவி சமீனா, 600 மீ., ஓட்டத்தில் முதலிடம், பிளஸ் 1 மாணவி நிவேதா, 3,000 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம் பிடித்து அசத்தினர். இவர்கள், தஞ்சாவூரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர். இவர்களை, பள்ளித் தாளாளர் சிவகுமார், தலைமையாசிரியர் சேதுராமன், உடற்கல்வி ஆசிரியர் அய்யப்பன், இணை உடற்கல்வி ஆசிரியர் நிர்மல்குமார் வாழ்த்தினர்.