உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 46 ஆண்டுக்குப்பின் ஆசிரியரை சந்தித்து மகிழ்ந்த மாணவர்கள்

46 ஆண்டுக்குப்பின் ஆசிரியரை சந்தித்து மகிழ்ந்த மாணவர்கள்

தொண்டாமுத்தூர்; சுண்டப்பாளையத்தில், 46 ஆண்டுகளுக்குப்பின், ஐ.டி.ஐ., ஆசிரியரை முன்னாள் மாணவர்கள் நேரில் சந்தித்து மரியாதை செய்தனர். துடியலூர் ஐ.டி.ஐ.,யில், கடந்த, 1979-81ம் ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் படித்த முன்னாள் மாணவர்கள், நேற்று சுண்டப்பாளையத்தில் சந்தித்தனர். இவர்களுக்கு, அப்போது, ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் நாகராஜ். இந்நிலையில், முன்னாள் மாணவர்கள், சுண்டப்பாளையத்தில் உள்ள தங்களுக்கு கல்வி கற்பித்த குருவான ஆசிரியர் நாகராஜை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். தங்களின் கல்வி கால நினைவுகளை ஆசிரியரிடம் கூறி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !