டெஸ்க் உடைந்து விழுந்த மாணவியர்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கோட்டூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். நேற்று காலை, வழக்கம்போல, இறைவணக்க கூட்டம் முடிந்தவுடன், மாணவியர் அவரவர் வகுப்புக்கு சென்றனர். அதில், பத்தாம் வகுப்பு 'பி' பிரிவில், மாணவியர் இருக்கையில் அமர்ந்தபோது, எதிர்பாராதவிதமாக, 'டெஸ்க்' உடைந்தது. இதில், மாணவிகள் மூவர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதையடுத்து, அவர்கள் மூவரும், கோட்டூர் அரசு மருத்துவனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிப்பட்டனர். தொடர்ந்து, ஏதேனும் உள் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை 'ஸ்கேன்' செய்து உறுதிப்படுத்துவதற்காக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் விசாரித்தனர்.