சுல்தான்பேட்டையில் சப்-கலெக்டர் ஆய்வு
சூலுார்; சுல்தான்பேட்டை வட்டாரத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளை, சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.சுல்தான்பேட்டை வட்டாரத்தில், வதம்பச்சேரி, வாரப்பட்டி, எஸ்.குமாரபாளையம், இடையர் பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கனவு இல்ல திட்ட வீடுகள், தூய்மை பாரத திட்ட பணிகள், எம்.எல்.ஏ.,தொகுதி வளர்ச்சி நிதி பணிகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் நடக்கின்றன. இப்பணிகளை சப் - கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே ஆய்வு செய்தார். பணிகளின் தரத்தை ஆய்வு செய்த அவர், அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பணிகளை உரிய காலத்தில், தரமாக முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின் போது, சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிக்கந்தர் பாஷா,சிவகாமி, ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் இருந்தனர்.