உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

கோவை; சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -1ல் அமைந்துள்ளது, கம்பீர விநாயகர் கோவில்.கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு, வரும் 11ம் தேதி பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதற்கான விழா, கடந்த 7ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. தினமும், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்து வருகிறது.நாளை காலை, 5:00 மணிக்கு, மகா கணபதி ேஹாமமும், 7:00 மணிக்கு, பால்குடம் எடுத்தலும், மாலை, 6:00 மணிக்கு, சீர் கொண்டு வருதலும், 6:30 மணிக்கு மாப்பிள்ளை வீடு அழைப்பும், இரவு, 7:00 மணிக்கு, பெண் வீடு அழைப்பும் நடக்கின்றன.வரும், 11ம் தேதி காலை, 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சிறப்பு ேஹாமம் நடக்கிறது. 10:00 மணிக்கு, சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு, அன்னதானமும், மாலை, 5:00 மணிக்கு, சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !