மேலும் செய்திகள்
கொண்டைக்கடலை சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள்
02-Oct-2025
பொள்ளாச்சி; கோவை மாவட்டத்தில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் பயறு வகைத் திட்டத்தின் கீழ், நுண்ணுாட்டங்கள், இடுபொருட்கள் மற்றும் செயல்விளக்கத் திடல்களுக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி அறிக்கை: கோவை மாவட்டத்தில், 6,483 ஹெக்டேரில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில், 1,053 ஹெக்டேர் கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. கொண்டைக்கடலை விதைப்புக்கு மட்டுமே மழை தேவை. என்.பெக்.47 மற்றும் 49 ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. இரண்டும் 105 நாட்கள் வயதுடையவை. முறையே ஏக்கருக்கு 10 மற்றும் 8 குவிண்டால் மகசூல் தரவல்லது. கோவையில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் பயறு வகைத் திட்டத்தின் கீ ழ், நுண்ணுாட்டங்கள், இடுபொருட்கள் மற்றும் செயல்விளக்கத் திடல்களுக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. கிணத்துக்கடவு, பெ.நா.பாளையம், பொள்ளாச்சி, சர்க்கார் சாமக்குளம் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களையோ, தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்ட ஆலோசகரையோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
02-Oct-2025