உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சோளம், ராகி, கம்பு விதைகளுக்கு மானியம்

சோளம், ராகி, கம்பு விதைகளுக்கு மானியம்

மேட்டுப்பாளையம்: தமிழ்நாடு சிறுதானியம் இயக்கம், மத்திய அரசின் உணவு மற்றும் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியம் இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் சோளம், ராகி, கம்பு விதைகள் மானியத்தில், வழங்கப்படுகின்றன.இதுகுறித்து, காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கூறியதாவது:-தமிழ்நாட்டில், சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சிறுதானியங்களின் நுகர்வை அதிகரிக்கும் வகையிலும், இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சிறுதானியங்கள் வறட்சியிலும் வளர்பவை, மருத்துவ குணம் அதிகம் நிறைந்தவை. சிறுதானியங்களை மதிப்பு கூட்டு பொருளாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யலாம். விநியோக விலையில், சோளம், கம்பு, ராகி, விதைகள் கிலோவிற்கு ரூ.30 மானியத்தில் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை அணுகி பயன் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி