உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  உணவு பார்சலுக்கு தரமற்ற பிளாஸ்டிக் டப்பா; துறை அதிகாரிகள் ஆய்வு அவசியம்

 உணவு பார்சலுக்கு தரமற்ற பிளாஸ்டிக் டப்பா; துறை அதிகாரிகள் ஆய்வு அவசியம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் உள்ள சில ஓட்டல்களில், உணவுப் பொருட்களை பார்சல் செய்ய, தரமற்ற கருப்பு மற்றும் வெள்ளை நிற 'பிளாஸ்டிக் டப்பா'க்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தள்ளது. தமிழகத்தில், மறு சுழற்சி செய்ய முடியாத, சுற்றுப்புற சூழல் மற்றும் மண்ணிற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய, பிளாஸ்டிக் பொருட்களை வணிகர்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. இருப்பினும், பொள்ளாச்சி நகரில் உள்ள, சில சைவ மற்றும் அசைவ உணவகங்களில், தரமற்ற கருப்பு மற்றும் வெள்ளை நிற 'பிளாஸ்டிக் டப்பா'க்களைப் பயன்படுத்தி பார்சல் தரப்படுகிறது. தன்னார்வலர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி நகரில், மாலை மற்றும் இரவு நேர தள்ளுவண்டிக்கடைகளில், முற்றிலுமாக பார்சலுக்கு வாழை இலை தவிர்க்கப்படுகிறது. மாறாக, பிளாஸ்டிக் பேப்பரில் சூடான உணவுப் பொருட்கள் பார்சல் செய்து கொடுக்கப்படுகிறது. இதுஒருபுறமிருக்க, சில ஓட்டல்களில், தரமற்ற பிளாஸ்டிக் டப்பாக்கள் பயன்படுத்தப்படுகிறது. அதில், சூடான உணவுப் பொருட்களை பார்சல் செய்வதால் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் பல்வேறு உடல் உபாதை ஏற்படுகிறது. அவற்றை திறந்தவெளியில் வீசுவதால் சுற்றுச்சூழலும் மாசடைகிறது. பெரிய அளவிலான ஓட்டல்களில் மட்டுமே வாழை இலையில், உணவு பார்சல் செய்து தரப்படுகிறது. உணவு பாதுகாப்பு துறையினர் முறையாக ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் பார்சல் செய்தவதற்கான தரமற்ற பிளாஸ்டிக் டப்பாக்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்