உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலமலை கோவிலில் சுதர்சன ஹோமம்

பாலமலை கோவிலில் சுதர்சன ஹோமம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில், உலக நலன் வேண்டி சுதர்சன ஹோமம் நடந்தது.இங்கு, உலக மக்கள் அனைவரும் எதிரிகள் தொல்லை இல்லாமல், வளமான சுற்றுச்சூழலுடன், மகிழ்ச்சியாக வாழ, மகா சுதர்சன ஹோமம் நடந்தது. கோவில் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத பாலமலை ரங்கநாதர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகள், கோவில் பரம்பரை தர்மகர்த்தா ஜெகதீஷ் தலைமையில் செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை