உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வடவள்ளி பகுதியில் திடீர் சாரல் மழை

வடவள்ளி பகுதியில் திடீர் சாரல் மழை

வடவள்ளி: வடவள்ளி சுற்று பகுதியில் நேற்று திடீரென சாரல் மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.கோவையில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாமல், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல இரவு நேரங்களில், பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும், வாகனங்கள் அதிகளவு செல்வதாலும், வெப்பம் அதிகரித்து, மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.இந்நிலையில், வடவள்ளி பகுதியில் பகல், 2:15 மணியளவில், திடீரென சாரல் மழை பெய்தது. சுமார், அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. வெயிலில் வாடிய மக்கள், திடீரென மழை பெய்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை