உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்றடுக்கு பாதுகாப்பில் சூலுார் விமானப்படைதளம்

மூன்றடுக்கு பாதுகாப்பில் சூலுார் விமானப்படைதளம்

சூலுார்:பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி, சூலுார் விமானப்படைத்தளத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பிரதமர் மோடி வரும், 27ம்தேதி தமிழகம் வருகிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். 27ம் தேதி சூலுார் விமானப்படைத் தளத்துக்கு தனி விமானத்தில் பிரதமர் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பல்லடம் செல்ல உள்ளார். இதையொட்டி சூலூர் விமானப்படைத் தளத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எஸ்.பி., பத்ரி நாராயணன் உத்தரவின்படி, சூலுார் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், டி.எஸ்.பி., தங்கராமன் தலைமையில் நடந்தது. விமானப்படைத்தளத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கி கண்காணிப்பது, மூன்று இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன சோதனை செய்வது, விமானப்படைத்தளத்தை சுற்றியுள்ள வீடுகளில் குடியிருப்போர், புது நபர்கள் யாராவது வந்துள்ளனரா என, சோதனை செய்வது என முடிவு செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் மாதையன், சண்முகவேல் மற்றும் எஸ்.ஐ., க்கள் பங்கேற்றனர்.

வாகன சோதனை தீவிரம்

திருச்சி ரோட்டில் காடாம்பாடி ஊராட்சி எல்லையில் தற்காலிக செக்போஸ்ட் அமைக்கப்பட்டு, போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.எஸ்.ஐ., தலைமையில் போலீசார், சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ