உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவியல் புரிதலை ஏற்படுத்தும் கோடை கால அறிவியல் முகாம்; மே 7ம் தேதி துவங்குகிறது

அறிவியல் புரிதலை ஏற்படுத்தும் கோடை கால அறிவியல் முகாம்; மே 7ம் தேதி துவங்குகிறது

கோவை; கோவை மண்டல அறிவியல் மையத்தில் மே 7ம் தேதி துவங்கும் அறிவியல் முகாமில் பங்கேற்க, முதலில் வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மண்டல அறிவியல் மையத்தில் மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக, அறிவியல், வானியல் உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வாரநாட்களிலும், வார இறுதி நாட்களிலும் பள்ளி மாணவர்கள் அழைத்துச்செல்லப்பட்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.இந்நிலையில், 6 முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் அறிவியல் குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதமாக, கோடைகால அறிவியல் முகாம், இம்மையத்தில் நடத்தப்படுகிறது. அதன்படி, வானியல் கருவி வடிவமைப்பு பயிற்சி மே 7ம் தேதியும், அறிவியல் முகாம் மே 16, 17ம் தேதிகளிலும் நடைபெறுகிறது.ஒளியியல் நுண்ணோக்கி பயிற்சி மே 13ம் தேதியும், 'கேம் டெவலப்மென்ட் வித் பிளாக் கோடிங்' மே 9, 10ம் தேதிகளிலும், '3டி மாடலிங் அண்ட் பிரிண்டிங்' குறித்த பயிற்சி முகாம் மே 19, 20ம் தேதிகளிலும் நடக்கிறது. முகாமன்று அதிகபட்சமாக, 50 மாணவர்கள், அதுவும் நேரில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. மிகவும் குறைந்த நுழைவு கட்டணத்துடன் இம்முகாம் நடைபெறுகிறது. விபரங்களுக்கு, 0422 2960326, 2963024, 85239 09178 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட அறிவியல் அலுவலர்(பொ) சுடலை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை