உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகள் சர்வே பணி துவக்கம்

மாற்றுத்திறனாளிகள் சர்வே பணி துவக்கம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் சர்வே பணிகள் துவங்கியுள்ளது.கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 847 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தின் சுகாதார நிலை குறித்து சர்வே எடுக்கும் பணிகள் நேற்று துவங்கப்பட்டது.இப்பணிகள் நிறைவடைந்த பின், அவர்களுக்கான இயன் முறை பயிற்சி, சிறப்பு கல்வி, ஆற்றுப்படுத்துதல் உள்ளிட்ட ஆறு வகையான மறுவாழ்வு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.இந்நிகழ்ச்சியை, கிணத்துக்கடவு பேருராட்சித் தலைவர் கதிர்வேல் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் துவக்கி வைத்தனர். இதில், திட்ட நிபுணர் கார்த்திகேயன், 5வது வார்டு கவுன்சிலர் சக்திசரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை