மேலும் செய்திகள்
கையுந்து பந்து போட்டி குமுதா பள்ளி சிறப்பு
08-Dec-2024
கோவை: காரமடை எஸ்.வி.ஜி.வி., பள்ளி மாணவ, மாணவியர் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.அதன்படி, 13 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் சுவாதிகா, கீர்த்தனா ஆகியோர் இம்மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் தேசிய கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மத்தியபிரதேசத்தில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில், 68வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது.இதில், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தனுஸ்ரீ தகுதி பெற்றுள்ளார். பள்ளி கல்வித்துறை சார்பில், 2024-25ம் ஆண்டு விளையாட்டு போட்டிகளில், 19 வயதுக்குட்பட்டோர் ஈட்டி எறிதலில் மாணவர் மகனீஸ், வட்டு எறிதலில் ஸ்ரீ சரண், 11 வயதுக்கு உட்பட்டோர் சதுரங்க போட்டியில் மாணவி பிரகண்யா தகுதி பெற்றுள்ளனர்.19 வயதுக்குட்பட்டோர் குத்துச்சண்டை போட்டியில் நெகிலாஸ்ரீ, 17 வயதுக்கு உட்பட்டோர் வாள் சண்டையில் மோசிக விஜயன் ஆகியோர் அடுத்தாண்டு ஜன., மாதம் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்கின்றனர்.தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில், 13 வயதிற்குட்பட்டோருக்கான மாநில கூடைப்பந்து போட்டி திருச்சியில் கடந்த மாதம் நடந்தது. மாணவியர் 'அ' பிரிவு அணிக்காக சுவாதிகா, கீர்த்தனா மற்றும் ஜோசிகா, தேர்வு செய்யப்பட்டனர்.கோவை 'ஆ' பிரிவு அணிக்காக ரோஸ்னா, ரோஸ்னி மற்றும் தேஜஸ்வினி தேர்வு செய்யப்பட்டனர். மாணவர் ரோஷன் ஆர்யா 'அ' பிரிவு அணிக்கும், வியாஷ், அகில் 'ஆ' பிரிவுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.'அ' பிரிவு மாணவியர் அணி இரண்டாம் இடத்தையும், 'அ' பிரிவு மாணவர் அணி முதலிடத்தையும் பெற்றது. திருச்சியில் நடந்த, 16 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், 'அ' பிரிவு அணிக்கு ரக்க்ஷித் குமார் தேர்வு செய்யப்பட்டார்.வெற்றி பெற்றவர்களை பள்ளி தாளாளர் பழனிச்சாமி, முதல்வர் சசிகலா, செயலாளர் ராஜேந்திரன், அறங்காவலர் தாரகேஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.
08-Dec-2024