உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சுவாமி சிவானந்தா பள்ளி முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுக்குப் பின் சந்திப்பு

 சுவாமி சிவானந்தா பள்ளி முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுக்குப் பின் சந்திப்பு

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள், 45 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்டனர். பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 1979--80 ஆண்டுகளில், 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள், 45 பேர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ஒன்று கூடினர். நிகழ்ச்சிக்கு, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன், கோவனூர் ரவி, கணேஷ் மூர்த்தி, மனோகரன், வில்சன், ரத்தினசாமி, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்களுடைய பள்ளி கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். எதிர்காலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குதல், சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய, தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ