மேலும் செய்திகள்
விவேகானந்தர் நினைவு நாள்
05-Jul-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.பொள்ளாச்சி ஜோதிநகர் சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றம் சார்பில், விவேகானந்தரின், 123ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. விவேகானந்தர் திருவுருவ படத்துக்கு மன்ற நிர்வாகிகள், திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், மலரஞ்சலி செலுத்தினர்.மன்ற தலைவர் மயில்சாமி தலைமை வகித்தார். திருக்கோவில் அறக்கட்டளையின் கவுரவ தலைவர் சங்கரவடிவேலு, சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். மன்ற செயலாளர் ரகுபதி நன்றி கூறினார். மன்ற துணை தலைவர்கள் முருகன், ஜோயல் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.* பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், சுவாமி விவேகானந்தர் மாணவர் சிந்தனைத்திறன் சார்பாக, விவேகானந்தர் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தனலட்சுமி வரவேற்றார். கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயரின் ஆடியோ உரை ஒலிபரப்பப்பட்டது.கல்லுாரி முதல்வர் மாணிக்க செழியன், இயற்பியல் துறை தலைவர் மஞ்சுளவள்ளி ஆகியோர் சுவாமி விவேகானந்தர் குறித்து பேசினர். முதுகலை சர்வதேச வணிகவியல் துறை தலைவர் விக்னேஷ், 'கற்றலில் விவேகம், கேட்பதில் ஆனந்தம் கண்டதோ விவேகானந்தம்' என்ற தலைப்பில் பேசினார்.மாணவர் நல முதன்மையர் முனைவர் முத்துக்குமரன், மாணவியர் அபிஷா, சபரிகிரி ஆகியோர் பேசினர். ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா நன்றி கூறினார்.
05-Jul-2025