உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி; ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி

ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி; ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி

பெ.நா.பாளையம்; கோவையில் உள்ள எஸ்.என்.ஆர்., அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், பல் மருத்துவ கல்லூரி, பார்மசி, பிசியோதெரபி பள்ளிகள், மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் இரட்டையர் போட்டிகள் நடந்தன. 16 அணிகள் கலந்து கொண்டன. அனைத்து போட்டிகளும், 'நாக்அவுட்' முறையில் நடந்தன.போட்டியை, கல்லூரி முதல்வர் கோபால் துவக்கி வைத்தார். முதல் அரை இறுதி போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி அணி, ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி அணியை, 2:0 என்ற நேர் செட்டில் வென்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.இரண்டாவது அரை இறுதி போட்டியில், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி அணி, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி 'பி' அணியை, 2:0 என்ற நேர் செட்டில் வென்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.இறுதிப் போட்டியில், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி அணி, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி அணியை, 2:0 என்ற செட்டில் வென்று, முதல் இடத்தை பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ