உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தை அமாவாசை கோவில்களில் சிறப்பு வழிபாடு

தை அமாவாசை கோவில்களில் சிறப்பு வழிபாடு

- நிருபர் குழு -பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன், அருள்பாலித்தார்.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.திப்பம்பட்டி சிவசக்தி கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், அம்பராம்பாளையத்தில் ஆழியாற்றின் கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து மக்கள் வழிபாடு செய்தனர்.* உடுமலை, சின்னபொம்மன்சாளை செல்வமாரியம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து வெள்ளிக்காப்பு அலங்காரத்தில், செல்வமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில், சின்னபொம்மன்சாளை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள், மக்கள் கலந்து கொண்டனர். அதே போல், உடுமலையை சுற்றியுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ