மேலும் செய்திகள்
கொடிசியாவில் அக்டோபரில் 'ஸ்டார்ட்அப்' மாநாடு
05-Aug-2025
கோவை: சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றம் (ஐ.டி.இ.எப்.,) உலகம் முழுதும் 9 கிளைகளுடன் செயல்படுகிறது. 5,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் சார்பில் தொழில்முறை மேம்பாட்டு மாநாடு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், செப்., 12, 13ல் நடக்கிறது. கருத்தரங்கில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். 'வியத்தகு தமிழ்நாடு; நிலையான எதிர்காலத்தை நோக்கி ஒன்றிணைவோம்' என்ற தலைப்பிலான இம்மாநாட்டில், இன்ஜினீயர்கள், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள், மாணவர்களுக்கான அமர்வுகள் நடக்கவுள்ளன. வேலைவாய்ப்பு முகாம், தொழில் அல்லது ஐடியாக்களுக்காக முதலீடுகளை ஈர்த்தல் என பல்வேறு அமர்வுகள் நடைபெறவுள்ளன. 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 70க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். டிட்கோ, ஸ்டார்ட் அப் டி.என்., அண்ணா பல்கலை, டான்சாம் உள்ளிட்ட அரசுத் துறைகள் பங்கேற்கின்றன.
05-Aug-2025