தமிழ் தேர்வு மிக எளிது; பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி
அன்னுார்;'தமிழ் பாடத் தேர்வு மிக எளிதாக இருந்தது,' என பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதிக மதிப்பெண் பெற முடியும்
சந்தோஷ், கெம்பநாயக்கன்பாளையம்: தமிழ் பாடத் தேர்வில், 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அனைத்தும்எளிதாக இருந்தன. அதிக மதிப்பெண் பெற முடியும். எளிதாக தேர்ச்சி பெறலாம்
கனகதுர்கா, ஆணையூர்:ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, எட்டு என அனைத்து மதிப்பெண் கேள்விகளும் மிக எளிதாக இருந்தன. வகுப்பில் ஆசிரியர் தெரிவித்த கேள்விகளே வந்திருந்தன. மிக மகிழ்ச்சியாக உள்ளது. நுாற்றுக்கு நுாறு பெற வாய்ப்பு
சிந்தாமணி, மூக்கனுார்:ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு மட்டும் சாய்ஸ் தரப்படவில்லை. இரண்டு மதிப்பெண், மூன்று மதிப்பெண் மற்றும் எட்டு மதிப்பெண் கேள்விகள் மிக எளிதாக இருந்தன. நுாற்றுக்கு நுாறு எடுக்கும் வாய்ப்பு உள்ளது.