மேலும் செய்திகள்
தமிழ்மொழி திறனறித்தேர்வு விண்ணப்பிக்கலாம்
06-Sep-2024
பொள்ளாச்சி : தமிழ்மொழி இலக்கியத் திறனறி தேர்வை எதிர்கொள்ள மெட்ரிக், சி.பி.எஸ்.சி., மற்றும் கேந்திரிய வித்யாலயா மாணவர்களும் தயாராகி வருகின்றனர்.பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறி தேர்வை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்தேர்வு வாயிலாக, 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வீதம் இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.அதன்படி, அரசு பள்ளிகளில், 50 சதவீத மாணவர்கள்; தனியார் பள்ளிகளில், 50 சதவீத மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மெட்ரிக், ஐ.சி.எஸ்.சி., சி.பி.எஸ்.சி., மற்றும் கேந்திரிய வித்யாலயா மாணவர்களும், திறனறி தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:2024--25ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், பிளஸ் 1 பயிலும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி, இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களிடம் அளித்து வருகின்றனர்.அந்த விபரங்களை, சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக, வரும், 26ம் தேதி வரை, பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான பணிகள், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. தேர்வை எதிர்கொள்ள அனைத்து மாணவர்களும் முயற்சி மேற்கொள்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
06-Sep-2024