உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு

கோவை : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின், கோவை மாவட்ட புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நேற்று ஸ்ரீ சங்கரமடத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் கணேசன் தலைமைவகித்தார்.கோவை மாவட்ட தலைவராக சுப்ரீம் சங்கர் பதவியேற்றார். மாவட்ட செயலராக தர்மராஜ், பொருளாளராக முகுந்தன், இளைஞர் அணி செயலாளராக சிவக்குமார் உட்பட 20 புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.சிறப்பு விருந்தினர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் ஈரோடு ஆடிட்டர் சங்கர ராமநாதன், சேலம் மாவட்ட தலைவர் சீனிவாசன், ஈரோடு மாவட்ட தலைவர் மோகன், திருப்பூர் மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.கோவை மாவட்டத்தின் டி.வி.எஸ்.நகர், டாடாபாத், கணபதி, சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம், ராம்நகர், குரும்பபாளையம் கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை