மேலும் செய்திகள்
தற்காலிக பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம்
25-Jan-2025
வால்பாறை; தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, எஸ்டேட்களில் நவீன இயந்திரத்தை பயன்படுத்தி தேயிலை பறிக்கும் பணி நடக்கிறது.வால்பாறை மலைப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு பயிரிடப்பட்டுள்ளன.பல்வேறு எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலை துாள், கோவை, கொச்சி, குன்னுார் போன்ற ஏல மையங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில், தொழிலாளர்களுக்கு விலைவாசிக்கு ஏற்ற சம்பளம் கிடைக்காததால், கடந்த, 2001ம் ஆண்டு முதல், தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறி, தொழில் நகரமான திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இடம் பெயர்ந்துள்ளனர்.இது தவிர, வால்பாறையில் வனவிலங்கு - மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டுவெளியேறி வருகின்றனர்.இதனிடையே, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க எஸ்டேட் நிர்வாகங்கள், அசாம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை அதிகளவில் பணியில் அமர்த்தியுள்ளனர்.தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, சமமட்டமான எஸ்டேட்டில் பசுந்தேயிலையை நவீன இயந்திரத்தைக்கொண்டு, தேயிலை பறிக்கும் பணி நடக்கிறது. இதனால் குறைவான ஆட்களை கொண்டு அதிகளவில் தேயிலை பறிக்கப்படுகிறது.தோட்ட அதிகாரிகள் கூறியதாவது: தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட நவீன இயந்திரத்தைக்கொண்டு, 30 தொழிலாளர்கள் செய்ய வேண்டிய பணியை, நான்கு தொழிலாளர்கள் செய்கின்றனர்.இதனால், தொழிலாளர் பற்றாக்குறையை ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தேயிலை பறிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.
25-Jan-2025