பாலித்தீன் கவர்களில் டீ சப்ளை; மக்களுக்கு நோய்கள் இலவசம்
வால்பாறை; வால்பாறையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சுழல் வெகுவாக பாதிக்கிறது.வால்பாறையில், வனஉயிரினங்களை பாதுகாக்கும் வகையில், கடந்த, 11 ஆண்டுகளுக்கு முன், பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், நகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் தடையை முறையாக கண்காணிக்காததால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது தமிழக அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், அரசு அலுவலகம், அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை.வால்பாறையில் உள்ள பெரும்பாலான, ேஹாட்டல்களில் பாலித்தீன் கவரில், டீ பார்சல் வழங்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை அறியாமல் தொடர்ந்து பாலித்தீன் கவரில், சூடாக டீ வாங்கி வந்து குடிப்பதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.