மேலும் செய்திகள்
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, விஸ்வதீப்தி பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் அருட்தந்தை ஆண்டனி கலியத் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜாய், பொருளாளர் அருட்தந்தை நிமீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை, ஆசிரியர்களும் விளையாட்டில் ஈடுபடும் வகையில், ஆசிரியர் நல்வாழ்வு தினம் என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டது.
05-Sep-2025