உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காதலியை இன்ஸ்டாகிராமில் தவறாக சித்தரித்த வாலிபர் கைது

காதலியை இன்ஸ்டாகிராமில் தவறாக சித்தரித்த வாலிபர் கைது

கோவை; கோவையில் கல்லுாரி மாணவியின் படத்தை சமூக வலைதளத்தில் மார்ப் செய்து தவறாக சித்தரித்த வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.கோவை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விமல் குமார், 25; டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜி., படித்துள்ளார். தற்போது லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், விமல் வேலைக்கு சென்ற இடம் அருகில் இருந்த பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து இருவரும் பேசி, பழகி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறி, நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், விமல் குமாரின் நடவடிக்கைகளை பிடிக்காததால் மாணவி, விமல் குமாரிடம் இருந்து விலகி சென்றார். இதனால் விமல் குமார் ஆத்திரத்தில் இருந்தார். இதையடுத்து, விமல் குமார் போலியாக 15 இன்ஸ்டாகிராம் கணக்குகளை துவங்கினார். அதில் மாணவி குறித்து தவறான செய்திகளை பதிவிட்டார். மேலும், மாணவியின் படத்தை மார்ப் செய்து அதில் மாணவியின் மொபைல் எண்ணை பதிவிட்டு, விபசாரத்திற்கு அழைக்கவும் என பதிவிட்டுள்ளார். இதனால், பலர் மாணவியின் மொபைல் எண்ணிற்கு அழைத்துள்ளனர்.மன உளைச்சலுக்கு ஆளான மாணவியால் அவரது படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விமல் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை