உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் வழித்தடம் தற்காலிகமாக மூடல்

கோவில் வழித்தடம் தற்காலிகமாக மூடல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, பாலாற்றங்கரையில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில், பாலாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரை மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.பக்தர்கள் தரைமட்ட பாலத்தை கடந்து, கோவிலுக்கு செல்ல வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு கருதி தகரஷீட் அமைத்து, வழித்தடம் தற்காலிகமாக மூடப்பட்டு, அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது. முழுமையாக தண்ணீர் வடிந்த பின், அனுமதி வழங்கப்படும், என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை