உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விமான நிலைய தற்காலிக விரிவாக்கம்; தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்

விமான நிலைய தற்காலிக விரிவாக்கம்; தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்

கோவை; கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முழுமை பெறும் வரையில், புறப்பாட்டு முனையத்தை தற்காலிகமாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, இந்திய தொழில் வர்த்தக சபை வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக, கோவை, இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுந்த் கூறியதாவது:விமான நிலைய விரிவாக்கம் தொடங்கி, முழுமை பெற சில ஆண்டுகள் ஆகிவிடும். விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை, தினமும் 10 ஆயிரத்தை எட்டி விட்டது. இதுதொடர்ந்து அதிகரிக்கும்.புதிய விமான சேவைகளைத் தொடங்க, உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக உள்ளன. தினமும் சராசரியாக, 30 விமான சேவைகள் தற்போது வழங்கப்படுகின்றன.இதனால், விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, நெரிசலாக உள்ளது. குறிப்பாக, புறப்பாட்டு முனையத்தில் (டிபார்ச்சர் டெர்மினல்) சில சமயம் நிற்கவே இடமில்லாத நிலை உள்ளது. எனவே, புறப்பாட்டு முனையத்தை தற்காலிக அடிப்படையில், இடதுபுறமாக விரிவாக்கம் செய்யலாம். சுமார் 10 ஆயிரம் சதுர அடிகளை விரிவாக்கம் செய்தால், தற்போதைய பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியும்.முழுமையான விரிவாக்கப் பணிகள் முடியும் வரை, 3 முதல் 4 ஆண்டுகள் வரை இந்த தற்காலிக ஏற்பாட்டை மேற்கொள்ள, விமான நிலைய ஆணையம் முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி