உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கல் முடிந்து பத்து நாளாச்சு: இன்னும் வேட்டி, சேலை கிடைக்கல

பொங்கல் முடிந்து பத்து நாளாச்சு: இன்னும் வேட்டி, சேலை கிடைக்கல

அன்னுார்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், வேட்டி, சேலை வழங்கும் பணியை துவக்கியது. அன்னுார் தாலுகாவில், 63 ஆயிரம் அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.இவர்களுக்கு கடந்த 10ம் தேதி வேட்டி சேலை வழங்கும் பணி ரேஷன் கடைகளில் துவங்கியது. 12ம் தேதி வரை வழங்கப்பட்டது. இதில் 47 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேட்டி, சேலை வழங்கப்பட்டது. பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு அனைவருக்கும் வழங்கப்பட்டது.மீதமுள்ள, 16 ஆயிரம் பேருக்கு, வேட்டி, சேலை ஸ்டாக் இல்லை. வந்தவுடன் வழங்கப்படும் என திருப்பி அனுப்பினர். பொங்கல் முடிந்து 10 நாள் ஆனபிறகும், ரேஷன் கடைகளில் விசாரித்தால், வேட்டி, சேலை வரவில்லை. அதற்கான அறிகுறியும் தெரியவில்லை, என்று கூறிவிட்டனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ''முதல் மூன்று நாள் டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டும் வேட்டி, சேலை வழங்கி உள்ளனர். உண்மையிலேயே வசதி இல்லாத பல்லாயிரம் பேர் நான்காவது, ஐந்தாவது நாட்கள் பொங்கல் பரிசு பெற டோக்கன் பெற்றவர்களுக்கு வேட்டி சேலை கிடைக்கவில்லை. அரசு அவற்றை விரைவில் வழங்க வேண்டும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ