உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.சி.டி., கல்லுாரியில் ஜவுளி தொழில்துறை மாநாடு

கே.சி.டி., கல்லுாரியில் ஜவுளி தொழில்துறை மாநாடு

கோவை; குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி பேஷன் தொழில்நுட்பத்துறை சார்பில், இயற்கை சாயங்கள் மற்றும் கைத்தறி ஜவுளிகள் தொழில்துறையில் புதுமையான ஆராய்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி என்பதை மையமாக கொண்டு தேசிய மாநாடு நடத்தப்பட்டது.கே.சி.டி., பிசினஸ் ஸ்கூல் இணைந்து நடத்திய இம்மாநாட்டில், 130 பேர் பங்கேற்றனர். 75 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. டெல்லி ஐ.ஐ.டி., ஜவுளி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் தீப்தி குப்தா தலைமை வகித்து நிகழ்வை துவக்கிவைத்து, இயற்கை சாயங்கள் தயாரிப்புகளில் உள்ள சவால்கள் அதன் வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தார்.இந்திய அரசின் தர மேம்பாட்டுக்கான தேசிய வாரியத்தின் ஆலோசகர் வேணுகோபால், இயற்கை சாயம் தர மேம்பாட்டில் தேவையான உதவிகள், ஆராய்ச்சிகள் குறித்து விளக்கமளித்தார்.நிகழ்வின் ஒரு பகுதியாக விழா மலர் வெளியிடப்பட்டது. கொல்கத்தாவிலுள்ள ஜே.டி.பிர்லா இன்ஸ்டிடியூட் முதல்வர் தீபாலி சிங்கீ, கே.சி.டி., பேஷன் டெக்னாலஜி முதன்மை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கே.சி.டி., பிசினஸ் ஸ்கூல் துறைத்தலைவர் மேரி செரியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி