உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காளியாதேவி கோவிலில் தை அமாவாசை பூஜை

காளியாதேவி கோவிலில் தை அமாவாசை பூஜை

மேட்டுப்பாளையம்:குண்டத்து காளியாதேவி கோவிலில், தை அமாவாசை பூஜை நடந்தது.மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. நேற்று தை அமாவாசையை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது; மதியம் உச்சி கால பூஜை நடந்தது.பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ராஜகணபதி, மாதேஸ்வரர், காசி விஸ்வநாதர், கங்கை அம்மன், முருகர், கால பைரவர், விஷ்ணு, துர்க்கை ஆகிய சுவாமிகளுக்கு, முதலில் பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, குண்டத்து காளியாதேவி அம்மனுக்கு பால், தயிர், நெய், தேன் உள்ளிட்ட, 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டன.தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகியோர் பூஜைகள் செய்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை