உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விருது பெற்ற டாக்டருக்கு தைப்பூச குழு பாராட்டு

விருது பெற்ற டாக்டருக்கு தைப்பூச குழு பாராட்டு

வால்பாறை; சிறந்த டாக்டருக்கான விருது பெற்ற, ஓய்வு பெற்ற அரசு டாக்டருக்கு, தைப்பூச விழாக்குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது. வால்பாறையை சேர்ந்தவர் டாக்டர் முனுசாமி. அரசு மருத்தவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கிறார். இந்நிலையில், இவரது சேவையை பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். சிறந்த டாக்டருக்கான விருது பெற்ற டாக்டரை கவுரவிக்கும் வகையில், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூச விழாக்குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாக்குழு செயலாளர்மயில்கணேஷ் தலைமையில், டாக்டருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை