உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.டி.நாயுடு பெயர் சங்கத்தினர் நன்றி

ஜி.டி.நாயுடு பெயர் சங்கத்தினர் நன்றி

பெ.நா.பாளையம்; அவிநாசி ரோடு மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டியதற்கு தமிழ்நாடு மகாஜன சங்கம், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இச்சங்கத்தின், கோவை மண்டல தலைவர் ஜெகநாதன் விடுத்துள்ள அறிக்கையில், 'கோவையில் பிறந்து உலகம் போற்றும் முதுபெரும் விஞ்ஞானியாக மாறியவர் ஜி.டி.நாயுடு. அவருடைய பெயரை அவிநாசி ரோடு மேம்பாலத்துக்கு சூட்டிய, தமிழக அரசுக்கு தமிழ்நாடு மகாஜன சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !