உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அபாய மரத்தால் மக்கள் அச்சம் அலட்சியத்தில் அதிகாரிகள்

அபாய மரத்தால் மக்கள் அச்சம் அலட்சியத்தில் அதிகாரிகள்

அன்னுார்;அன்னுாரில் எந்த நேரமும் விழும் மரத்தை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியப்படுத்துகின்றனர்.அன்னுாரில், மேட்டுப்பாளையம் சாலையில், பஸ் ஸ்டாண்ட் எதிர்ப்புறம், 50 ஆண்டுகளுக்கு மேலான வேப்பமரம் உள்ளது. இந்த மரம் வறண்டு, காய்ந்து போய், இலைகள் உதிர்ந்த நிலையில் உள்ளது.மரத்தின் அடிப்பகுதியில் கரையான் அரித்து பொந்து ஏற்பட்டு பலவீனமான நிலையில் உள்ளது. வேகமாக காற்று அடிக்கும் போதும், மழை பெய்யும் போதும், மரக் கிளைகள் ஆடி மக்களை அச்சுறுத்துகிறது.இதுகுறித்து இப்பகுதி கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் மாநில நெடுஞ்சாலை துறையில் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி செல்லும் பஸ்கள், இந்த மரத்துக்கு முன்புறம் நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். அதிக அளவில் இந்த சாலையில் போக்குவரத்து உள்ளது. மிக வேகமாக காற்று வீசும்போது மரம் சாலையில் முறிந்து விழும் அபாயம் உள்ளது. அப்போது வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக விழும் நிலையில் உள்ள இந்த மரத்தை அகற்ற வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை