மேலும் செய்திகள்
மின்வெட்டை கண்டித்து சாலை மறியல்
31-Oct-2025
அன்னுார்: சாலையில் உள்ள குழியால் ஒருவர் பலியானதாக, மறியல் போராட்டத்தில் ஒருவர் ஈடுபட்டார். அவிநாசியில் இருந்து, அன்னுார் வழியாக மேட்டுப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. சாலையில் நான்கு இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு புறம் பணி நடப்பதால் மற்றொருபுரத்தில் நெரிசல் ஏற்பட்டு விபத்து நடப்பதாகவும், சமூக ஆர்வலர் கோபால், அன்னுார் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் தெரிவித்தார். எனினும் நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி இறந்தார். இதனால், கோபால், நேற்று நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினார். போலீசார், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ஆனந்தகுமார், உதவி பொறியாளர் சுகுமார் ஆகியோர், இவருடன் பேச்சு நடத்தினர். அவரையும் பொது மக்களையும் அழைத்துக் கொண்டு, குழிகள் உள்ள இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். 'உடனடியாக குழிகள் சமன்படுத்தப்படும். ரிப்ளக்டர்கள் பொருத்தப்படும். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர் சென்றார்.
31-Oct-2025