மேலும் செய்திகள்
கும்பாபிஷேகம்
05-Nov-2024
கோவை ; போத்தனுார் செல்வ விநாயகர், பாலமுருகன் பாலாலயம் (இளங்கோவில்) கும்பாபிேஷகம் வரும் 13ல் நடக்கிறது.போத்தனுார், குருசாமி பிள்ளை வீதியில் அமைந்துள்ளது, செல்வ விநாயகர், பாலமுருகன் கோவில். ஐம்பது ஆண்டுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டது. கோவில் திருப்பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்குள்ள செல்வ விநாயகர், பாலமுருகனுக்கு பாலாலயம், வரும் 12ம் தேதி அமைக்கப்படுகிறது. வரும் 13ம் தேதி காலை, 7:15 மணிக்கு, வேள்வியும், காலை, 9:00 முதல் 10:30 மணிக்குள், பாலாலயத்துக்கு கும்பாபிேஷகமும் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
05-Nov-2024