மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை
14-Oct-2025
கோவை: கோவையில் சில நாட்களாக பெய்து வரும் மழையால், நகர் பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வருகிறது. தாழ்வான பகுதிகள், பள்ளி வளாகங்கள், சாலையோரங்களில் தேங்கிய மழை நீர் மாநகராட்சியின் நீர் உறிஞ்சும் வாகனங்கள் மூலம் அகற்றப்படுகிறது. இடையர்பாளையம் சாலை, வ.உ.சி. வீதி, விராலி ரோடு, குமரன் வீதி இரண்டாவது தெரு, மகேஸ்வரி காலனி, பாலாஜி கார்டன், அன்பு நகர், முல்லை நகர், சத்தி ரேடு அத்திப்பாளையம் பிரிவு, சரவணம்பட்டி கட்டபொம்மன் வீதி, சின்ன வேடம்பட்டி நேதாஜி தெரு, பாலக்காடு மெயின் ரோடு, பி.கே.புதுார், குனியமுத்துார் என்.எஸ்.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில், மாநகராட்சி ஊழியர்கள் மூலம் மழை நீர் அகற்றப்பட்டது. இதேபோல், மழைக்கு பல்வேறு இடங்களில் ரோடு மோசமாகி இருக்கிறது. சமீபத்தி ல் போடப்பட்ட ரோடுகளும் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சேரன் மாநகர், ராமாத்தாள் லே-அவுட் ரோடு, விளாங்குறிச்சி மெயின் ரோடு, குமுதம் நகர், ஐஸ்வர்யா கார்டன், உருமாண்டம்பாளையம் சாலை, கந்தசாமி லே-அவுட், காந்தி நகர் சாலை, தயிர் இட்டேரி சாலை, காந்தி மாநகர், ஜே.எம்.வி. கார்டன், கருவாட்டு கம்பெனி சாலை, லட்சுமிபுரம், வரதராஜபுரம் சின்னப்பன் தெரு, வேலப்பன் தெரு, கல்பனா லே-அவுட் மற்றும் ராதிகா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில், சேதமடைந்த சாலைகளில் ஜல்லிக்கலவை கொட்டி, சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள், மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் நடக்கிறது. 'வெட்மிக்ஸ்' கொட்டுவது, தற்காலிக தீர்வாக இருக்கிறது. அடுத்து பெய்யும் மழைக்கு, வெட்மிக்ஸ் கரைந்து வெறும் ஜல்லி மட்டும் கிடக்கிறது. சில நாட்களில் அவை சிதறி, அப்பகுதியில் பள்ளமாகி விடுகிறது. நெடுஞ்சாலைத்துறையில் பயன்படுத்துவது போல், ரெடிமிக்ஸ் தார் கலவையை பரப்பி, பள்ளத்தை சமன் செய்ய வேண்டும்.
14-Oct-2025