உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவசரமாக நாளை கூடுகிறது மாநகராட்சி மாமன்ற கூட்டம்

அவசரமாக நாளை கூடுகிறது மாநகராட்சி மாமன்ற கூட்டம்

கோவை, ; கோவை மாநகராட்சியில் மாமன்ற அவசர கூட்டம் நாளை (14ம் தேதி) காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.கோவை மாநகராட்சியில், மாதந்தோறும் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம் நடத்துவது வழக்கம். கடந்த மார்ச், 28ல் மாமன்ற கூட்டமும், பட்ஜெட் கூட்டமும் ஒன்றன் பின் ஒன்றாக நடத்தப்பட்டன.கடந்த ஏப்., மாதம் மாமன்ற கூட்டம் நடத்தப்படவில்லை. இம்மாத துவக்கத்தில் கூட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்த திட்டங்களுக்கு மதிப்பீடு தயாரித்து, தீர்மானங்களை சமர்ப்பித்து, மன்றத்தில் நிறைவேற்ற அறிவுறுத்தியதால், ஒரு வாரமாக அதற்கான பணிகளில், மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.இச்சூழலில், உள்ளாட்சி பதவிகளில் காலியாக உள்ள இடங்களில், இடைத்தேர்தல் தேதி அறிவிக்க இருப்பதால், இம்மாதம் கூட்டம் நடத்த வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டு விடும். அதனால், நாளை (14ம் தேதி) காலை, 10:30 மணிக்கு மாமன்ற அவசர கூட்டம் நடைபெற இருப்பதாக, மாநகராட்சி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவசர கூட்டம் என்பதால், தீர்மான நகல்கள் அவசர அவசரமாக நேற்று தயாரிக்கப்பட்டு, இரவோடு இரவாக கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ