வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மிக நல்ல செய்தி
கோவை: மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த சாலைக்கு, கோர்ட் வழக்கைக் காரணம் காட்டி, கேட் அமைத்து வழியை மறித்துள்ளது மாநகராட்சி நிர்வாகம். மாநகராட்சி 59வது வார்டுக்கு உட்பட்டது சிங்காநல்லூர், கிருஷ்ணா கார்டன். கிருஷ்ணா கார்டன் பூங்காவை ஒட்டி, ரிலையன்ஸ் கார்டனுக்கும் பூங்கா இடம் ஒதுக்கப்பட்டது. கிருஷ்ணா கார்டன் மற்றும் அதைச் சுற்றிய பகுதியைச் சேர்ந்த மக்கள், பூங்காவின் கிழக்குப்பகுதியில் 25 அடி அகலத்தில் சுமார் 150 நீளத்தை, திருச்சி சாலை வந்து செல்ல பாதையாகப் பயன் படுத்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இரு பூங்காக்களையும் தனித்தனியாக பிரித்து வேலி அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து, 2016ல் தொடரப்பட்ட வழக்கில், இரு பூங்காக்களையும் ஒன்றாக இணைக்க உத்தரவிடப்பட்டது. பாதையாக பயன்படுத்தும் பகுதி குறித்து, மாநகராட்சி நிர்வாகமே நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி நிர்வாகம் வழக்கம்போல கிடப்பில் போட்டு விட்டது. இந்நிலையில், கடந்த வாரம், பூங்காவின் ஓரத்தில் பாதையாக பயன்படுத்தப்பட்ட இரு புறங்களிலு ம் மாநகராட்சி நிர்வாகம் கேட் அமைத்தது. நேற்று முன்தினம் பாதையை முற்றிலும் தடை செய்யும் நோக்கில் பூங்கா சுற்றுச்சுவரை மாநகராட்சி நிர்வாகம் இடித்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணா கார்டன் மக்கள் பூங்கா வளாகத்தில் ஒன்று கூடினர். மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் போதிய விளக்கம் அளிக்காததால், மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெயராமன் கூறுகையில், ''தினமும் 5,000க்கும் மேற்பட்டவர்கள் இதைப் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். கோர்ட்டில் இன்று(நேற்று) மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது என்பதால், அவசர அவசரமாக சுற்றுச்சுவரை இடித்துள்ளனர்.ஓரிருவரின் வசதிக்காக, இந்த பாதையை அடைப்பது சரியல்ல என்றார். அப்பகுதி மக்கள் கூறுகையில், '59வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தீபா ரிலையன்ஸ் கார்டன் பகுதியில் தங்கியிருக்கிறார். அவரும் இதற்கு உடந்தை. பாதையை அடைத்தால், ஆயிரக்கணக்கான மக்கள் திருச்சி சாலையில் போராட்டத்தில் இறங்குவோம்' என்றனர்.
மிக நல்ல செய்தி