உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொலைதூர கல்வி முறை; மார்ச் 31 வரை அவகாசம்

தொலைதூர கல்வி முறை; மார்ச் 31 வரை அவகாசம்

பொள்ளாச்சி:பாரதியார் பல்கலை தொலைதுார கல்வி முறையில் இணைய வழி பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இணையவழி கல்வி பிரிவின் கீழ், பி.ஏ., ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., ஆகிய இளநிலை பிரிவுகள், எம்.ஏ., தமிழ், எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., பொருளாதாரம், எம்.காம்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.இம்முறையில் மாணவர்கள் சேர்க்கை முதல், கற்றல் கற்பித்தல், கல்வி கட்டணம் செலுத்துதல், தேர்வுகள், சான்றிதழ் வழங்குதல் அனைத்தும் இணைய வழிமுறையிலேயே நடைபெறும்.இப்பட்டப்படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள், பல்கலை இணையதளத்தின் https://b-u.ac.in/ வாயிலாக விண்ணப்பிக்கலாம்.கல்வி கட்டணம் உள்ளிட்ட பிற விபரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மார்ச் 31ம் தேதிக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ