உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறை கேட்டறிந்த மாவட்ட எஸ்.பி.,

குறை கேட்டறிந்த மாவட்ட எஸ்.பி.,

கோவை: மாவட்ட போலீஸ் சார்பில், பொது மக்கள் குறைதீர் முகாம் எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று நடந்தது. பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, விசாரணை மற்றும் ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கை மீது அதிருப்தி உள்ளவர்களின் மனுக்கள் மீதான மறு விசாரணை, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. நேற்று நடந்த குறைதீர் முகாமில், பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, 70 மனுக்கள் மீது மறுவிசாரணை நடத்தப்பட்டது. அதில் 51 மனுக்களுக்கு சம்பந்தப்பட்டவர்களிடம், நேரடியாக பேசி சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது. மேலும் 17 மனுக்களுக்கு மேல் விசாரணையும், 1 சி.எஸ்.ஆர்., மற்றும் ஒரு எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. குறைதீர் கூட்டத்தில், கூடுதல் எஸ்.பி., துணை எஸ்.பி., ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ