உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூஜைக்கேற்ற பூவிது... கலர் கலரா மாறுது!

பூஜைக்கேற்ற பூவிது... கலர் கலரா மாறுது!

நிறம் மாறும் ரோஜாக்கள் இருப்பதாக அறிந்து, கோவை பூ மார்க்கெட்டுக்கு ஒரு விசிட் அடித்தோம்.அங்கு நர்சரி வைத்திருக்கும் ராஜா, ''காலநிலை மாற்றத்தால் சில பூக்கள் அரிதாக நிறம் மாறுவது உண்டு. அவற்றை நம் பயன்படுத்துவது குறைவு. அதை 'கலர் சேஞ்சிங் ரோஸ்' என்று சொல்கின்றனர். செடியில் பூக்கும் போது சிவப்பு நிறத்தில் இருந்தால், ஒரே வாரத்தில் மஞ்சள் நிறமாக மாறிவிடும். வெள்ளை நிறத்தில் பூக்கும் ரோஜா, அடுத்த வாரத்தில் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் மாறி விடும். இந்த ரோஜாவை தலையில் சூட்டிக்கொள்ளலாம். பூஜைக்கும் பயன்படுத்தலாம். வீட்டிலும் வளர்க்கலாம். இந்த செடியின் அசல் நாற்று, கோவையில் கிடைப்பதில்லை. பெங்களூருவில் கிடைக்கின்றன. சேலம், ஓசூர் பகுதி மற்றும் தென்மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில், இந்த பூவை அதிகம் பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் இந்த செடியை பயிரிட்டால் அதிகம் மகசூல் கிடைக்கும்.ஒரு செடியில் வாரம் ஒரு கிலோவுக்கு மேல் பூ கிடைக்கும். ஆனால் 'ஒரிஜினல் மதர் பிளான்ட்' பார்த்து வாங்க வேண்டும். ஒட்டுச்செடி வாங்கினால் மகசூல் கிடைக்காது.அசல் செடியில் முள் இருக்காது. போலியில் முள் இருக்கும். இந்த ரோஜா, மார்க்கெட்டில் அறிமுகம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. இப்போதுதான் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை