உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆஞ்சநேயர் கோவிலில் ராஜகோபுரம் கட்ட அடிக்கல்

ஆஞ்சநேயர் கோவிலில் ராஜகோபுரம் கட்ட அடிக்கல்

மேட்டுப்பாளையம்; இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவிலில், 2.28 கோடி ரூபாய் செலவில், ஐந்து நிலை ராஜகோபுரம் கட்ட, காணொளி காட்சி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சிறுமுகை அடுத்த இடுகம்பாளையத்தில், அனுமந்தராய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்ட, ஹிந்து சமய அறநிலையத்துறை, 2.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதை அடுத்து ராஜகோபுரம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.அப்போது, ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில், ராஜகோபுரம் கட்டும் இடத்தில், கோவில் அர்ச்சகர் சிறப்பு பூஜை செய்தார். இதில் ஹிந்து சமய அறநிலைத்துறை, கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம், கோவில் செயல் அலுவலர் வெண்ணிலா, அறங்காவலர் குழு தலைவர் சண்முகம், உறுப்பினர்கள் முத்துசாமி, மயில்சாமி, பழனிசாமி, தமிழ் மாத முதல் சனிக்கிழமை விழா குழு தலைவர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ