உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு துவங்கியது

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு துவங்கியது

கோவை; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பைக் கா ன விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு போட்டி, கற்பகம் பல்கலை யில் நேற்று துவங்கியது. இதற்காக 53 ஆயிரத்து 576 பேர் பதிவு செய்துள்ளனர். பள்ளிகளில் இருந்து 22 ஆயிரத்து 314, கல்லுாரிகளில் 20 ஆயிரத்து 915, மாற்றுத்திறனாளிகள் 902, அரசு ஊழியர்கள் 1,768, பொதுப்பிரிவில் 7,677 பேர் பங்கேற்கின்றனர். கடந்தாண்டு 39 ஆயிரத்து, 738 பேர் பதிவு செய்தனர். நடப்பாண்டு 13 ஆயிரத்து, 838 பேர் கூடுதலாக பங்கேற்க உள்ளனர். செப். 12 வரை கோவையின் பல்வேறு இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. கடந்தாண்டு, 102 பதக்கங்களுடன் கோவை மூன்றாம் இடம் பிடித்தது. இந்தாண்டு முதலிடம் பிடிக்கும் முனைப்புடன் வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை