| ADDED : டிச 04, 2025 08:02 AM
சூலூர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்க நிர்வாகிகள் கூறியதாவது: 'பழைய ஓய்வூதிய திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கொண்டு வருவோம்,'என, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். பதவிக்காலமே முடிய போகிறது. ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை. அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் அனைவருக்கும் காலமுறை ஊதியம், சட்டபூர்வமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டங்களை நடத்தி வருகிறோம். கடந்த, 18ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.