உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொடர்ந்து குறைகிறது நிலத்தடி நீர்மட்டம் கவனிக்காமல் விட்டால் கோடையில் சிக்கல் தான்

தொடர்ந்து குறைகிறது நிலத்தடி நீர்மட்டம் கவனிக்காமல் விட்டால் கோடையில் சிக்கல் தான்

கோவை: 'நிலத்தடி நீரை உறிஞ்சும் அளவுக்கு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், ஒவ்வொருவரும் ஆர்வம் செலுத்த வேண்டும்' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.நீர்வளத்துறையின் கீழ், நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் செயல்படுகிறது. இதன் சார்பில், ஒவ்வொரு மாதமும், நிலத்தடி நீர்மட்டம் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படுகிறது. துறை சார்பில் சென்னை தவிர, மற்ற 37 மாவட்டங்களில், கண்காணிப்பு கிணறுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு முடிவு சொல்வதென்ன?

ஆய்வின் படி, கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த நவம்பர் மாதம் 7.89 மீ., ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், டிசம்பர் மாதம் 7.93 மீ., நடப்பாண்டு ஜன., மாதம் 8.29 மீ., பிப்ரவரி மாதம் 8.76 மீ., மார்ச் மாதம் 10.48 மீ., ஆழத்துக்கு சென்றது. அவ்வப்போது மழை பெய்தாலும், வெயில் வாட்டி வரும் நிலையில், நிலத்தடி நீர்மட்டம், இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை தொடர்ந்து உறிஞ்சுகிறோமே தவிர, நிலத்தடிக்குள் நீரை சேகரிப்பதில் போதிய விழிப்புணர்வு இல்லை என்ற கவலையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது:இன்று கழிவுநீர் மிகப்பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. உதாரணமாக, கோவை வாலாங்குளத்தை எடுத்துக் கொண்டால், 10 அடிக்கு சாக்கடை சேறு கலந்திருக்கிறது. மழை பெய்தாலும் கூட, வீணாக செல்லக் கூடிய வாய்ப்பு தான் ஏற்படும்.

கேட்டட் கம்யூனிட்டிகளில்...

'கேட்டட் கம்யூனிட்டி'களில், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி ஏற்படுத்தி, அதை தோட்டம், கழிவறை உட்பட பல உபயோகங்களுக்கு பயன்படுத்தலாம். மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை, மக்களிடையே எடுத்து செல்ல வேண்டும். 'கேட்டட் கம்யூனிட்டி' போன்ற குடியிருப்புகள், பரவலாகி விட்டன. இதுபோன்ற பகுதிகளில், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு போர்வெல் அமைக்காமல், குறிப்பிட்ட எண்ணிக்கையில் போர்வெல் அமைத்து, நீரை தொட்டிகளில் சேகரித்து, வீடுகளுக்கு வினியோகிக்கும் வகையில் ஏற்பாடு செய்யலாம். நிலத்தடி நீரை எடுக்கும் அளவுக்கு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், ஒவ்வொருவரும் ஆர்வம் செலுத்த வேண்டும். தவறினால், நீருக்கு சிரமப்பட வேண்டியிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.'கேட்டட் கம்யூனிட்டி' போன்ற குடியிருப்புகள், பரவலாகி விட்டன. இதுபோன்ற பகுதிகளில், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு போர்வெல் அமைக்காமல், குறிப்பிட்ட எண்ணிக்கையில் போர்வெல் அமைத்து, நீரை தொட்டிகளில் சேகரித்து, வீடுகளுக்கு வினியோகிக்கும் வகையில் ஏற்பாடு செய்யலாம்.

'ரீ சார்ஜ் போர்வெல்

அமைக்க வேண்டும்'''கோவை மாவட்டத்தில், ஒரு ஆண்டில் சராசரியாக 650 மி.மீ., மழை பெய்யும். வீடுகளில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி அதன் வாயிலாக, கிடைக்கும் நீரை சேகரிக்கலாம். போர்வெல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 'ரீ சார்ஜ்' போர்வெல் அமைப்பதில் முனைப்பு செலுத்த வேண்டும்,'' என்றார் வனிதா மோகன்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி