உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பருவமழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் தயார்

பருவமழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் தயார்

பொள்ளாச்சி : வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பருவமழையை முன்னிட்டு, கடந்த மாதம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ரோடுகளில் உள்ள பெரிய பாலங்கள், சிறிய பாலங்களில் நீர்வழிப்பாதை சுத்தம் செய்யப்பட்டது. மழைநீர் தடைபடாமல் செல்லும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள சூழலில், மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுத்துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்படி, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இப்பணிகளை பொள்ளாச்சி உட்கோட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மழை காலங்களில் மண் சரிவை தடுக்க மணல் மூட்டைகள், சவுக்கு குச்சிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மரங்கள் விழுந்தால் அவற்றை உடனடியாக அகற்ற, தேவையான உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, உடனுக்குடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார்படுத்தப்பட்டுள்ளது.நான்கு ரோடு ஆய்வாளர்கள், 31 ஊழியர்கள் என, மொத்தம், 35 பேர் பராமரிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான போதிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி