உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹிந்து மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஹிந்து மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.ஹிந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜியை கைது செய்ததை கண்டித்து, கோவை தெற்கு மாவட்ட, ஹிந்து மக்கள் கட்சி தமிழகம் கட்சி சார்பில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நாகேந்திரன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திருமுருகனார், மாநில வர்த்தக அணி செயலாளர் ரவி, மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் கலாதாரன் ஆகியோர் பேசினர்.தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திபன், மாவட்ட செயல் தலைவர் மனோசங்கர், நகர தலைவர் நாகராஜ், நிர்வாகி செல்வராஜ் பலர் பங்கேற்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 13 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை