உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் அறிவித்த ஊக்கத்தொகை 41 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை

முதல்வர் அறிவித்த ஊக்கத்தொகை 41 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை

அன்னுார்;முதல்வர் அறிவித்த ஊக்கத்தொகை, 41 நாட்கள் ஆகியும் கிடைக்காததால், பால் உற்பத்தியாளர்கள் தவிக்கின்றனர்.தமிழகத்தில் ஆவின் நிறுவனம், நான்கு லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து, தினமும் 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. பால் உற்பத்தியாளர்கள் விலை கட்டுபடியாகவில்லை என்று பல மாதங்களாக போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.இதையடுத்து டிச. 18ம் தேதி முதல் ஜன. 31ம் தேதி வரை வழங்கப்பட்ட பாலுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் வீதம் ஊக்கத்தொகை கணக்கிடப்பட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் வழங்கப்பட்டது. அதன் பிறகு 41 நாள் ஆகிவிட்டது.இது குறித்து அன்னுார் வட்டார பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: பிப். 1ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை ஆவின் நிறுவனத்துக்கு வழங்கிய பாலுக்கு இதுவரை ஊக்கத்தொகை வழங்கவில்லை. ஆவின் நிறுவனம் 10 நாட்கள் வழங்கிய பாலுக்கு பதினோராவது நாள் பணம் வழங்கி வருகிறது. அத்துடன் சேர்த்து ஊக்கத்தொகை வழங்காமல் வாரக் கணக்கில் இழுத்தடிக்கின்றனர்.கறவை மாட்டுக்கு தீவன செலவை கணக்கிட்டால் ஒரு ரூபாய் கூட மிச்சமாவதில்லை. எனினும் அரசு ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை கொடுப்பதால் ஆவினுக்குபால் வழங்கி வருகிறோம். அந்த தொகையும் 41 நாட்களாக கிடைக்காததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம்.அரசு உடனடியாக 41 நாள் ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். வரும் நாட்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் வழங்கும் போதே ஊக்கத்தொகையையும் வழங்க வேண்டும்.இவ்வாறு பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ